Tuesday, March 8, 2016

யார் கொங்கு வெள்ளாளர்? – ஓர் தெளிவு


           
நமது நாட்டில் வாழும் மக்களின் கலாச்சார ஒழுக்கம் மற்றும் பண்பாடு பாரம்பரியமாக அவர்களது குலவழக்கமாக வருவது. மேலும், அதனை குலவழக்கமாக இன்னும் பல ஆயிரம் தலைமுறைக்கு பண்புடன் அடுத்துசெல்லவேண்டியாத இருந்து வருகிறது.


 ஒவ்வொரு குணநலனும் திறமைகளும் மரபணுக்கள் மூலமாகவே காக்கப்பட்டு பல தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. கல்லாமல் பாகம் பாடும் என்ற தமிழ் பழமொழியின் மூலம் இது நன்கு விளங்கும். நமது நாட்டில் வாழும் குலங்கள் அது சார்ந்த உட்பிரிவு குடிகள் அனைத்தும் தமது மரபணுக்களை தமது குல ஒழுக்கம், சீர் மற்றும் சம்பிரதாயங்கள் மூலமாகவே காத்துவரப்படுகிறது. 

மேலும், கல்யாண காரியங்களுக்கு இவை ஆணிவேறாய் திகழ்கிறது. ஆகவே, கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிராக உவமைப்படுத்தப்படுகிறது. அதாவது ஆயிரம் ஆயிரம் காலமாக காத்து வரப்படும் குடி எனப்பொருள்படும். 


உலகளவில் பலநாட்டு மக்கள் இதனை இன்றளவும் சிரத்தையுடன் மேற்கொள்கின்றனர். குறிப்பாக உலகையே இன்றுவரை தனது விஞ்ஞான, , வியாபார, பொருளாதார கட்டுபிடியில் வைத்திருக்கும் யூதர் சமூகம் இன்றுவரை யூத பெண்ணை பிற இன அல்லது நாட்டு மக்களுக்கு கல்யாணம் செய்துகொடுப்பதில்லை. இதன்மூலம் அவர்கள் அவர்களது அறிவுஜீவியான மரபணுக்களை தங்களுக்குள் காத்து வாழ்கின்றனர்.



            ஆனால், ஒழுக்க குடிகளான கொங்க வெள்ளாளர்கள் இந்த நவீன தகவல் தொடர்பு, போக்குவரத்து செறிவுமிக்க உலகில் நமது மரபுகளை தொலைத்து, திசைமாறி நமது மரபணுக்களை கல்யாணம் என்னும் ஆயிரங்காலத்து பயிரில் தற்போது தொலைத்து வர ஆரம்பித்துள்ளனர். 



இதற்கு வழிகோலியது அம்பேத்கர். அவர் சாதியை ஒழிக்கும் வழி என்ன?’ என்னும் கட்டுரையில் கூறும்போது சாதீய சீர்திருத்தத்தில் தேவையான முதல் நடவடிக்கை உட்சாதிகளை ஒழிப்பதே என்று ஒரு கண்ணோட்டம் இருந்து வருகிறது. சாதிகளுக்குள் இருப்பதைவிட உட்சாதிகளுக்குள் நடை உடை பாவனைகளிலும், அந்தஸ்திலும் பெரும்பாலும் ஒத்த தன்மை இருக்கிறது என்ற எண்ணமே இந்தக் கண்ணோட்டத்துக்கு காரணம்என்று குறிப்பிட்டார். (Annihilation of castes. Dr. Babasaheb Ambedkar Writing and Speeches. )



இதனை நடைமுறைக்கு கொண்டுவந்தது கோவை செழியன் மற்றும் அவர்களை பின்பற்றும் கொங்கு இயக்கங்கள் மற்றும் கொங்கு கட்சிகள். கோவை செழியனின் சதியால் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கொங்கு மண்டலத்தில் உள்ள பல்வேறு ஜாதிகளை ஒன்றிணைத்து “கொங்கு வெள்ளாளர் ஜாதி சான்றிதழ்” பெறவைத்தது. 


சாதியை முன்னேற்றுகிறோம், இடஒதுக்கீடு வாங்கித்தருகிறோம் என்று குரல்கொடுத்து கலாச்சாரத்திற்கு, ஒழுக்கத்திற்கு வேட்டு வைத்துள்ளனர் இந்த கொங்கு அரசியல் தீயசக்திகள். தங்களது சுயநலத்திற்காக (ஓட்டு வங்கியை அதிகப்படுத்தி காட்ட) கொங்கர் காலச்சாரத்தை மக்களை அடமானம் வைத்துள்ளனர் இந்த தீயசக்திகள். இது இன்றைய குடும்பங்களில் அதன் ஒற்றுமைகளில் பெரும் வேட்டாய் உருவாகிவிட்டது. திருமண தகவல் மையம் என்ற போர்வையில் போலி ஜோதிடர்கள் மூலம் இல்லாத ஜோசிய பிரிவுகளை உருவாக்கி பலசாதிகளை ஒன்றிணைத்து பல வகுப்புகளை ஒன்றிணைத்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். 

மேலும், கவுண்டர் என்ற பட்டம் உள்ள பல பிரிவு ஜாதிகளை இந்த கொங்கு வெள்ளாளர் ஜாதியின் கீழ் கொண்டு வந்துள்ளனர். அரைகுறை வரலாற்று சமூக ஆராய்ச்சியாளர்கள் கவுண்டர் பட்டம் உள்ள பல்வேறு பலபட்டரை ஜாதிகளையும் இதன் கீழ் இணைத்து நூல் எழுதி விடுகின்றனர். வெள்ளாளர் என்ற பெயர் கொண்ட அனைத்து பிரிவுகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து அரசியல் பிழைப்பு நடத்தவும் சில விஷமிகள் கோடாரிக்காம்புகளாக செயல்படுகின்றன.

      கொங்கு மண்டலத்தில் வாழும் வெள்ளாளர்கள் பல உட்பிரிவுகளை வரலாற்றில் இடநகர்வு மற்றும் குடியமர்த்தல், குலபாரம்பரியம், வாழும் புவியியல், நிர்வாக அதிகார அளவு, பிரதேச ஒழுக்கம் போன்ற பலவற்றின் அடிப்படையில் பல்வேறு உட்குடிகளாயும், வகுப்புகளாயும் உள்ளனர். இவற்றில் அடிப்படையிலே கல்யாணங்கள் நடைபெறுகிறது.

            இன்றளவும், கிராமங்களில் இந்த உட்குடிகள் அதன் பங்காளி வீட்டு பெரியோர்கள், அருமைக்காரார்கள் மற்றும் கொங்கு குடிபடை ஜாதிகளின் கட்டுமானத்தில் சீர் சம்பிரதாயமுறைகளின் வண்ணம் தனது உட்குடி மற்றும் வகுப்புகளை தேர்ந்தெடுத்து மணஉறவு கொண்டு நிம்மதியாக வாழ்கின்றனர்.

            ஆனால், நகரங்களில் கடந்த பதினைந்து வருடங்களாக படித்து குடிபெயர்ந்த குடும்பங்கள் இந்த பிரிவுகளை உணராமல் கல்வி, சொத்து, கொங்கு வெள்ளாளர் ஜாதிச்சான்றிதழ் அடிப்படையிலும் மணஉறவு கொள்ள ஆரம்பித்துள்ளனர். மேலும், திரைப்படங்கள், அரசியல் சித்தாந்தங்கள், திராவிட மாயை, போன்ற பலபட்டறை காலாச்சாரங்கள் மற்றும் கொங்கு அரசியல் சதியில் நமது இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு மதியிழந்து தமது பாரம்பரிய வேரினை அறுக்க ஆரம்பித்துள்ளனர். இதற்கு காரணம் அறியாமை. யூதன் புத்திசாலி கொங்க முட்டாளானான். இதன் காரணமாக பிறக்கும் குழப்பம் மிகுந்த சந்ததிகள் அடிப்படை கலாச்சாரமின்றி மேற்கத்திய பொருளாதார கூலிப்படை  மாறிவருகிறது. 

ஏனெனில், இத்தகைய கலப்புகளினால் பங்காளி மற்றும் ஊர் ஒற்றுமை குழையும். பொது விழாக்கள் நடத்த இயலாது. விவசாயம் பாழ்படும். இதனை சரி செய்து வழக்கம் போல் நமது பாரம்பரிய மாமன் மச்சினன் குடும்பங்களில் மண உறவு கொண்டு, பங்காளிகளை அனுசரித்து, பொருளாதார வேற்றுமையை களைந்து, அரசு ஜாதி சான்றிதழ்களை புறக்கணித்து, பொய்யான வியாபார ஜோதிட பொருத்தங்களை தள்ளி நமது சடங்குபடி பொருத்தம் கணித்து பழையபடி மணஉறவுகள் மற்றும் இதர கொங்கு குடிபடை சாதிகளுடன் சமூக நல்லிணக்க உறவுகொள்ள வேண்டியும் இந்த பதிவு இடப்படுகிறது. 


இக்கட்டுரையில், தமிழகத்தில் உள்ள பல கவுண்டர் பட்ட சாதிகள், வெள்ளாளர் சாதிகள் மற்றும் கொண்டு வெள்ளாள உட்குடிகள் வகுப்புகள் பற்றி ஒரு சிறு தெளிவு ஏற்ப்பட வேண்டி தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

கொங்கு வெள்ளாளர் கல்யாண தரகுகளில் நிலவும் குழப்ப வகைகள்
1.    “கவுண்டர்” பட்டம் உள்ள பல ஜாதிகளை எப்படி பாகுபடுத்தி பார்ப்பது? எல்லா கவுண்டரும் ஒன்றல்ல என்பதை கல்யாண தரகுகளில் உணர.

2.    வெள்ளாளரில் உள்ள உட்குடிகளை கல்யாண தரகுகளில் பிரித்து அறிய

3.    கொங்கு மண்டல வெள்ளாளரில் சில கூட்டம்/கோத்திரங்களை பிரித்து அறிய/ தெளிவு பெற

4.    வெள்ளாளரில் உள்ள கூட்டங்களில் நாட்டார் வகையறா/காணியாளர் வகையறா மற்றும் குடிவந்தோர் வகையாரக்களை பிரித்து அறிய


1.   “கவுண்டர்” பட்டம் உள்ள பல ஜாதிகளை எப்படி பாகுபடுத்தி பார்ப்பது? எல்லா கவுண்டரும் ஒன்றல்ல என்பதை கல்யாண தரகுகளில் உணர.
            “கவுண்டன்” என்பது உண்மையில் ஜாதி அல்லது குடி பெயரல்ல. படையை தலைமை தாங்கும் குடிகளுக்கு கொடுக்கப்பட்ட பட்டம். காமிண்டன் என்று சேர/கங்க மன்னர்களால் கொடுக்கப்பட்டது காலப்போக்கில் கவுண்டன் என்று மருவிவிட்டது. இந்த பட்டம் மேற்கு தமிழ் நாட்டில் ஊர் மற்றும் நாட்டு அதிகாரம் பெற்ற பல ஜாதிகளுக்கு உண்டு. எனவே, கீழ் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் அடிப்படையில் கல்யாண காரியங்களில் உங்களை தெளிவுபடுத்திக்கொண்டு அவரவர் சொந்தங்களில் மட்டும் பெண் தேடுங்கள். பொது திருமண தகவல் மையம் மற்றும் கொங்கு திருமண தகவல் மையம் ஆகியவற்றில் பதிவு செய்தவற்றை நம்பி ஏமாறாதீர்கள்.
            மத்திய அரசின் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பட்டியலில் உள்ள கவுண்டர் பட்டம் பெற்ற ஜாதிகளின் தொகுப்பு மற்றும் அவற்றின் விளக்கங்களை கீழே காணலாம்.
வரிசை எண்
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பட்டியலில் உள்ள கவுண்டர் பட்டம் பெற்ற ஜாதிகள்
இந்த ஜாதிகள்/வகுப்புகளின் வரலாற்று விளக்கம்  (அறிஞர்கள்/பெரியோர்களின் கூற்று அடிப்படையில்)
41
கவுண்டர்  
 பிரித்தரிய இயலாத பேர். இது வெறும் பட்டம். குடிப்பெயர் அல்ல. இந்த பட்டப்பெயரை உள்ளவர் அனைவரும் வெள்ளாளர் அல்லர். கொங்கு பகுதியை சேர்ந்த வெள்ளாளர், வேட்டுவர், குறும்பர், வன்னிய பள்ளி, அனுப்பர், சோழநாட்டு முத்துராஜா எனும் படையாச்சி பிரிவு ஊராளி, சின்னமேள கைக்கோள திருமுடியார், ஆண்டி ஆகியோருக்கும் "கவுண்ட" பட்டம் உள்ளது. பட்டத்திற்கு குடிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனால் கவுண்டர் என்று கூறினால் என்ன குடி என்று கேளுங்கள். 

42
கவுடா  (கம்மாளா, கலாளி, அனுப்ப கவுண்டர் உட்பட)
கன்னடம் பேசும் தேனீ மாவட்ட அனுப்ப கவுண்டர்கள்
60
கள்வேலி கவுண்டர்
மதுரை பாலமேடு, சோழவந்தான் பகுதியில் வாழும் பள்ளி (அ) வன்னிய படையாச்சி. நாவாபுகளால் பெரம்பலூரிலிருந்து வெளியேறி இப்பகுதியில் குடியேறியவர்கள்.  சோழ வந்தான் தொகுதியில் ஓட்டு வாங்க, அடையாளம் இழந்த இவர்களை கொங்கு அரசியல்வாதிகள் கவுண்டர் என்று பொய்யுரைத்து வருகின்றனர். 
73
 கொங்கு வெள்ளாளர்  (15 பிரிவுகள் உட்பட)
கீழே உள்ள 15 பிரிவுகளுக்கும் ஒரு பெயரில் (கொங்கு  வெள்ளாளர்) ஜாதிச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. உட்பிரிவுகள் குறிப்பிடப்படுவதில்லை. (அம்பேத்கர் கூறியதை நிறைவேற்றுகின்றனர் கட்சிக்காரர்கள்) 
1.    வெள்ளாள கவுண்டர்    
பொதுவாக ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், கோவை மாவட்டங்களில் வாழும் நாட்டு  ஆட்சி, காணியாட்சியுடைய கொங்கு வெள்ளாளர்கள். கரூர் & தாராபுரம் சேரர்களினால் கவுண்டர் பட்டம் சூட்டப்பட்டு நட்டுரிமையுடன் வாழ்பவர்கள். பெரும்பான்மையினர். இவர்களை செந்தலை (அ) தென்திசை வெள்ளாளர் என்று பிற பிரிவு வெள்ளாளர்கள் அழைப்பர். இவர்களுள், நாட்டதிகாரம் பெற்ற எஜமானர்களும், காணியதிகாரம் பெற்றவர்களும், காணியதிகாரத்தை விட்டு புலம் பெயர்ந்த குடிவந்த வகுப்புகளும் அடங்குவர். இம்மூவரும் தங்களுக்கு இடையில் மணவினை கொள்ளார். அவரவர் வகுப்புகளில் மட்டுமே மணவினை கொள்வர். 
2.    நாட்டு கவுண்டர்
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசாண்ட வெள்ளாளர்கள் தங்களை நாட்டுக்கவுண்டர் என்று அழைத்துகொள்கின்றனர். இது வெள்ளாளரில் உள்ள நாட்டு  ஆட்சி உள்ள வகுப்பு. இவர்கள் தங்களுக்குள் சில கூட்டங்களில் மட்டுமே திருமண செய்வர். காணியாள கொங்கு வெள்ளாளரில் திருமணம் செய்வதில்லை. செய்யகூடாது. 
மேலும் படிக்க http://www.karikkuruvi.com/2013/12/blog-post_23.html
 
3.    நரம்புகட்டி கவுண்டர்
பவானி ஆற்றுக்கு வடகரையில் பவானி, அம்மாபேட்டை, கோபி, சத்தியமங்கலம் வரை உள்ள வெள்ளாளர்கள். இவர்கள் தங்களை வடகரை வெள்ளாளர் என்றும் நரம்புகட்டி கவுண்டர் என்றும் அழைத்துகொள்வர். இவர்கள் சம்பிரதான்யங்கள் பிறருடன் மாறுபடும். இவர்கள் செந்தலை வெள்ளாளர்களுடனோ பிற பிரிவுகளுடன் மணவினை கொள்வதில்லை. கொள்ளகூடாது. பாவனி கோயிலை கட்டிய வணங்காமுடி கட்டிமுதலி வெள்ளாள அரசர்களுக்கு துணைநின்றவர்கள். 
மேலும் படிக்க http://www.nisaptham.com/2013/05/blog-post_23.html
 
4.    திருமுடி கவுண்டர் 
இவர்கள் சின்னமேள கைக்கோளர் வகை. பிற இடங்களில் சின்ன மேள  கைக்கோளரில் உள்ளவர்கள் இங்கு மட்டும் கவுண்டர் பட்டத்தை பெற்றுள்ளனர். இவர்கள் பாரம்பரியம் சிவன் கோயிலில் நாட்டியம் ஆடி இறைவனை மகிழ்வித்தல். இறைவனுக்கு 16 வகை உபசாரங்களை செய்து பூஜையில் இறைவனை சாந்தி செய்தல். இறைவனை மகிழ்விக்க பாடுதல். 
 கொடுமுடி நகரில் மட்டுமே வாழும் ஒரு சிறுபிரிவு. இவர்கள் வெள்ளாளர் அல்லர். வெள்ளாளர் அல்லாத கவுண்டர் பட்டம் பெற்றவர்களுள்  சிறந்த எடுத்துக்காட்டு இவ்வகையினர். கரூர், மேட்டூர் பகுதியிலும் வாழ்கின்றனர். இவர்களுக்கும் சேரன், பொன்னி , தனியன் , இவ்வாறு கூட்ட பெயர்கள் உண்டு. 

 இவர்கள் தாயின் பெயரை இனிசியளாக கொள்வர். பிரபல பாடகர் கே.பி.சுந்தராம்பாள் இவ்வகுப்பை சார்ந்தவர். இவர்பெயர் கொடுமுடி பாலாம்பாள் சுந்தராம்பாள் ஆகும். இவர்கள் நிறைய பேர் பெங்களூர், சென்னை, கோயமுத்தூர் பகுதிக்கு  பிழைப்புக்கு குடிபெயர்ந்துள்ளனர். தற்போது இவர்களுக்குள் ஒற்றுமை இல்லாததால் பெண்கிடைப்பதில்லை. ஆகையால் தங்கள் பகுதியில் உள்ள வெள்ளாள கூட்டங்களை வைத்துக்கொண்டு தங்கள் அடையாளத்தை மறைக்கின்றனர். 

சிவபெருமானுக்கு செய்யும் உபச்சாரம் மற்றும் பரதக்கலையை மறந்துவிட்டனர். 

இவர்கள் தொண்டன் (அ) இளங்கம்பன்  என்றும் அழைப்பர். இவர்கள் கார்வழி, சேலம் அத்திகாட்டானூர், பணிக்கனூர், பவளாத்தானூர், தாரமங்கலம் , சேந்தமங்கலம், மின்னாம்பள்ளி, நைனர்மலை, துத்திகுளம் பகுதியில் வாழ்கின்றனர். மேலும், கொங்கு மண்டலம் முழுவதும் சில ஊர்களின் சில குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்கள் வெள்ளாளர்களில் முறைதவறி பிறஜாதிகளுக்கு பிறந்த மக்கள். 

ஒழுக்கத்தை மீறி பிறக்கும் இத்தகைய வாரிசுகளை தனியாக பிரித்து தொண்டு வெள்ளாளர் என்று உருவாக்கியுள்ளனர். இவர்களுக்கு சில இடங்களில் காணியாட்சியும் உள்ளது. கொங்கு காணியாள  வெள்ளாளர் கோயில்களுக்கும் வருகின்றனர். இவர்களை பிரித்து தெளிவது கோயில் பொறுப்பாளர்களின் கடமையாகும். மேலும் படிக்க http://thonduvellalar.blogspot.in/2017/03/blog-post.html

இன்றும் குடும்பத்தில் ஒழுக்கம் இல்லாமல் சுற்றும் வாலிபர்களை தொண்டு என திட்டும் வழக்கம் உள்ளது.

6.    பால கவுண்டர்
இவர்கள் பால வெள்ளாள வகையினர் 
7.    பூசாரி கவுண்டர்
இவர்கள் வெள்ளாளர்களுள் பூசை செய்யும் ஒரு பிரிவு. சேலம், மேட்டூர் பகுதிகளில் வாழ்கின்றனர். 
8.    அனுப்ப வெள்ளாள கவுண்டர்
கன்னடம் பேசும் தேனி மாவட்ட அனுப்ப கவுண்டர். 
மேலும் படிக்க 
அனுப்ப கவுண்டர் மேட்ரிமோனி
https://sivamatrimony.com/cms.php?cms_id=45

அனுப்ப கவுண்டர் சங்கம் ஊத்துப்பட்டி
9.    குறும்ப கவுண்டர்
குறும்பர். இவர்கள் வெள்ளாளர் அல்லர். இவர்கள் மலையோரங்களில் வெள்ளாடு மேய்க்கும் ஜாதியினர். (கொல்லிமலை, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் வாழ்கின்றனர்). குறும்பு செய்பவர்கள். இவர்களுக்கும் கூட்டம் மற்றும் கவுண்டர் பட்டம் உள்ளது. ஆனால் இவர்களுடன் பிற பிரிவுகளில் கொள்வினை  கொடுப்பினை கிடையாது.  
10.  படத்தலை கவுண்டர்
விஜயமங்கலம் சுற்று வட்டாரங்களில்  வாழும் ஒரு வெள்ளாளர் பிரிவு. இவர்களுக்குள் மட்டுமே மணவினை. அவினாசி கொங்கு சோழர்களை ஆதரித்தவர்கள். இவர்களுக்குள் 11 கூட்டங்கள் உள்ளது. 
11.  செந்தலை கவுண்டர்
இந்த பெயர் நொய்யலுக்கு தெற்கே வாழும் கொங்கு வெள்ளாளர்களை குறிக்க நொய்யல் மற்றும் பாவனி ஆறுகளுக்கு  வடக்கே வாழும் பிற வெள்ளாளர்கள் பயன்படுத்தும் வழக்கு. அதாவது  “தென்”திசை (அ) “செந்”தலை (மரூஊ) அன்று குறிக்கின்றனர்.  நொய்யலுக்கு தெற்கே இருந்து வடக்கே வந்து வாழும் வெள்ளாளர்களையும் இவ்வாறே இன்றும் அழைக்கின்றனர். 
12.  பவளங்கட்டி வெள்ளாள கவுண்டர்
தாரமங்கலம், ஓமலூர், கிருஷ்ணகிரி பகுதியில் வாழும் வெள்ளாளர்கள் பவளங்கட்டி அன்று அழைக்கின்றனர். இவர்களுக்கு தலைமை தாரமங்கலம் வணங்காமுடி கெட்டிமுதலி வெள்ளாளர்கள். 
 மேலும் படிக்க http://kongupavalangattivellalagounder.blogspot.com/2018/03/kongu-pavalangkatti-vellala-gounder.html

http://kongupavalangattivellalagounder.blogspot.com/2018/03/kongu-pavalangatti-vellala-gounder.html

13.  பால வெள்ளாள கவுண்டர்
இவர்கள் பெருமாநல்லூர் முதல் மருதமலை வரைக்கும் நொய்யலுக்கு வடக்கும் பவானி ஆற்றுக்கு தெற்கேயும் வாழும் வெள்ளாளர்கள். இவர்கள் கொங்கு சோழர் வம்சாவழியினர். சேரனை வென்று சோழர்கள் சமணரை அழித்து சைவத்தை தழைக்க செய்து இவ்வெள்ளாளரை கொங்கு மண்டலத்தை காக்க குடிவைத்தனர். இவர்களுக்கு தலைவன் கொங்கு சோழர். இவர்கள் நாட்டை காப்பதால் பால வெள்ளாளர்கள் என்று அழைக்கின்றனர். இவர்களுக்குள் இரட்டை சங்கு, ஒற்றை சங்கு வெள்ளாளர் என்று பிரிவு உண்டு. இவர்களுக்குள் 23 கூட்டங்கள் உள்ளது. சங்கு வளையல் அணிபவர்கள். இவர்களது சீர்கள் கொங்கு வெள்ளாளரை காட்டிலும் சிறிது மாறுபடும். 

மேலும், படிக்க http://originalkonguvellalar.blogspot.com/2011/02/blog-post.html  
14.  சங்கு வெள்ளாள கவுண்டர்
 இவர்கள் கையில் சங்கு அணியும் பால வெள்ளாளர்களில் ஒரு பிரிவாக இருக்கலாம். 
15.  ரத்தினகிரி கவுண்டர்
இவர்கள் படயாச்சி (அ) வன்னியர் வகுப்பு. குளித்தலை ரத்தினகிரி மலையை சுற்றி வாழும் ஓர் பிரிவு. 

123.
புள்ளுவர் (அ) பூலுவர், பூலுவ கவுண்டர்
பூலுவர் என்பவர்கள் காளஹஸ்தியிலிருந்து வந்த வேட்டுவர்குலம் ஐந்தில் ஓர் பிரிவு. கொங்கு மண்டலம் முழுவதும் வாழ்கின்றனர்.
  மேலும் படிக்க https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=15&cad=rja&uact=8&ved=2ahUKEwjjm5j04abeAhVBPI8KHcH_C_wQFjAOegQIAhAB&url=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3D449764561878017%26id%3D449518038569336&usg=AOvVaw3v0wh8tw43TD3jRFI-fFv2
150
ஊராளி கவுண்டர் - மாநிலம் முழுதும்  & ஊருடைய கவுண்டர் – (மதுரை, கோயமுத்தூர், ஈரோடு, திருச்சி, புதுகோட்டை, சேலம் மாவட்டங்களில் உள்ளனர்)
ஊராளி என்பவர்கள் முத்துராஜா (அ) முத்தரையர் (அ) வலையர் என்றழைக்கப்படும் ஒரு பிரிவு குளித்தலை, தொட்டியம், திருச்சி பகுதிகளில் வாழ்கின்றனர். 
மேலும் படிக்க https://www.google.com/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=17&cad=rja&uact=8&ved=2ahUKEwiXw8fu46beAhVKuY8KHUqWBvwQFjAQegQICBAB&url=http%3A%2F%2Fveeramutharaiyartrichy.blogspot.com%2F2016%2F06%2Fblog-post.html&usg=AOvVaw1n3853oM5si7fUJen4g2TF
157
வன்னியகுல ஷத்திரிய (வன்னிய, வன்னியர், வன்னிய கவுண்டர், கவுண்டர் (அ) கண்டர், படயாச்சி,  பள்ளி மற்றும் அக்னிகுல ஷத்திரிய)


இவர்கள் பள்ளி (அ) படயாச்சி என்று பொதுவாக அழைக்கபடுகின்றனர். இவர்கள் இடங்கை சாதி. சேலம் மற்றும் அங்கிருந்து குடிபெயர்ந்த படயாச்சிகளுக்கு கவுண்டர் பட்டம் உள்ளது.  இவர்கள் நகரப்பகுதிகளில் தங்களை படயாச்சி என்றே சொல்வதில். கவுண்டர் என்றே அழைத்துகொள்கின்றனர். 
மேலும் படிக்க http://dharmapuri-gounders.blogspot.com/
165
வேட்டுவ கவுண்டர், புண்ணன் வேட்டுவ கவுண்டர்
வேட்டுவர் காளஹஸ்தியிருந்து கொங்கு மண்டலம் வந்த ஐந்து சாதி வேட்டுவர்களில் ஒரு பிரிவு. கொங்கு மண்டலம் முழுவதும் காணி உரிமையும் சில இடங்களில் நாட்டதிகாரமும் பெற்று வாழ்கின்றனர். இவர்களுக்கும் கவுண்டர் பட்டம் உண்டு.
 மேலும் படிக்க https://goundar.page.tl/%26%232997%3B%26%233015%3B%26%232975%3B%26%233021%3B%26%232975%3B%26%233009%3B%26%232997%3B-%26%232965%3B%26%232997%3B%26%233009%3B%26%232979%3B%26%233021%3B%26%232975%3B%26%232992%3B%26%233021%3B-%26%232990%3B%26%232985%3B%26%233021%3B%26%232985%3B%26%232992%3B%26%233021%3B%26%232965%3B%26%232995%3B%26%233021%3B.htm

2.    வெள்ளாளரில் உள்ள உட்குடிகளை கல்யாண தரகுகளில் பிரித்து அறிய

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள கொங்கு வெள்ளாளர்என்ற சாதி பிரிவில் கீழ்கண்ட 15  ஜாதி உட்பிரிவுகள் இடம்பெறுகின்றன.
                                                          i.    வெள்ளாளக் கவுண்டர்
                                                         ii.    நாட்டுக் கவுண்டர்
                                                        iii.    நரம்புக் கட்டிக் கவுண்டர்,
                                                       iv.    திருமுடி வேளாளர்,
                                                        v.    தொண்டு வேளாளர்,
                                                       vi.    பாலக் கவுண்டர்,
                                                      vii.    பூசாரிக் கவுண்டர்,
                                                     viii.    அனுப்ப வேளாளக் கவுண்டர்
                                                       ix.    குரும்பக் கவுண்டர்
                                                        x.    படைத்தலைக் கவுண்டர்
                                                       xi.    செந்தலைக் கவுண்டர்
                                                      xii.    பவளங்கட்டி வெள்ளாளக் கவுண்டர்,
                                                     xiii.    பால வெள்ளாளக் கவுண்டர்,
                                                     xiv.    சங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும்
                                                      xv.     ரத்தினகிரிக் கவுண்டர் 
ஆனால், இவை எழுத்து பூர்வ ஜாதிச்சான்றிதழ் மற்றும் கணினி ஜாதிச்சான்றிதழில் குறிக்கப்பட மாட்டா. நிதர்சனத்தில், இவற்றுள் சில வெள்ளாளரே இல்லை. கவுண்டர் பட்டத்தை நம்பி ஏமாற வேண்டாம். மேலும், பிற வெள்ளாள கவுண்டர்களுக்குள், பிரிவுகளுள் திருமண உறவுகள் இல்லைகூடாது என்று பெரியோர்கள் கூறிச்சென்றுள்ளனர். கடைபிடித்துள்ளனர். ஓவ்வொன்றும், அவற்றிற்குள் உள்ள கூட்டங்களுள் தனி மணவினைகள் கொண்டவை. சில இந்த பிரிவையும் தாண்டி உள்ளூர் வழக்கப்படி நெருங்கிய சில கூட்டங்களுள் மணவினை கொண்டவை. அவை அந்தந்த பங்காளிகளுள் பெரியவர்களுக்கே தெரியும். மீறி முறைதவறினால் குலதெய்வ சாபம் ஏற்பட்டு, அவர்களின் முன்னோர் (பித்ரு) சாபம் ஏற்பட்டு குலநாசம் ஏற்படுகிறது. எனவே, கல்யாண விசாரணைகளில், சொந்த பந்தங்களிடம் கலந்து விசாரித்து கொள்ளவும். “கொங்கு வெள்ளாளர்சான்றிதழை நம்பி மோசம் போவதை தவிர்க்கவும். கூடியபொருட்டு தெரிந்த சொந்தத்தில் அருகருகே மணவினைகள் கொள்வதால் இந்த குழப்பத்தை தவிர்க்கலாம்.

3.   கொங்கு மண்டல வெள்ளாளரில் சில கூட்டம்/கோத்திரங்களை பிரித்து அறிய/ தெளிவு பெற
கொங்க வெள்ளாளர் (வெள்ளாள கவுண்டர்) கூட்டங்கள் 64 என கம்பர் வதுவை பட்டயம் கூறுகிறது. ஆனால், பின்னாளில் சில கூட்டங்கள் இரண்டாக பிரிந்து பங்காளிகளாக இருந்து வருகிறது, சில வேறு காரணபெயர்களில் குறிக்கப்படுகிறது. இவற்றை புரிந்து கொள்ளாமல் இன்றைய இளைஞர்கள் பங்காளிகள் (சகோத்திரர்கள்) கல்யாணம் செய்யும் அவலநிலை உருவாகியுள்ளது. இவை பெரும்பாலும் இ-மெயில், இன்டர்நெட், புரிதலில்லாத  சமூக ஆய்வர்களின் புஸ்தகங்களின் வாயிலாக நடக்கிறது. இதனை சிறிது தெளிவடைய செய்யும் நோக்கில் கீழே சில விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன.
                                      i.        கன்னன் மற்றும் கன்னத்தை இவை இரண்டும் ஒன்றே. கன்னனிலிருந்து பிரிந்து கன்னனை தந்தையாக கொண்டு உருவாகிறது கன்னந்தை. இவை இரண்டும் கோயில் வேறாக இருந்தாலும் பங்காளி முறையே. இவற்றுள் கல்யாணம் கூடாது. சிலர் கன்னாந்தை என்று ஆந்தை கூட்டத்துடன் இணைப்பர். அது மடத்தனம். கன்னந்தை  = கன்னன் + தந்தை.
                                     ii.        அடுத்து, பொருளந்தை கூட்டம். இவர்கள் தற்காலத்தில் பொருள்தந்த/பொருள்ஈந்த  குலம் என்று தங்களை மாற்றிகொள்கின்றனர். தன் தந்தையின் பெயரை  தாங்களே அவமானமாக கருதினால் எவ்வாறிருக்கும்? பொருளந்தை என்பதே சரி. மேலும், பொருளந்தை களில் காடையூர் காணி பெற்றவர்கள் முழுக்காது பொருளந்தை என்று அழைக்கப்பட்டனர். நாளைடைவில் அக்கோயிலை சேர்ந்தவர்கள் முழுக்காதன் கூட்டம் என்ற அடைமொழியை வைத்துக்கொண்டு பொருளந்தை என்ற கூட்டப்பெயரை மறந்துவிட்டனர். தற்போது அதனை மறுக்கின்ற அளவுக்கு சென்று விட்டனர். சில இடங்களில் காடையூர் முழுக்காது பொருளந்தையும், பிடாரியூர் பொருளந்தையும் கல்யாணம் செய்யும் அவலநிலை உருவாக்கி இருக்கிறார்கள் பெற்றோர்கள் மற்றும் இளைஞர்கள். எனவே, முழுக்காது பொருளந்தை என்று காடையூர் பொருளந்தை கூட்டத்தார் அழைக்க வேண்டும்.
                                    iii.        சாந்தந்தை மற்றும் பூச்சந்தை கூட்டம் பங்காளிகளாவர். கொள்வினை கொடுப்பினை கிடையாது.
                                   iv.        ஆனால், சாகாடை மற்றும் பனங்காடை இரண்டும் மாமன் மைத்துனர் ஆவர். கரூர் பகுதியில் சின்ன காடை (பனங்காடை),பெரியகாடை (சாகாடை) என்று அழைப்பர். ஆனால், காடைக்குருவிக்கும் இவர்கள் கூட்டப்பெயர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. “காட” “காடர்” “பனங்காட”  “பனங்காடர்” என்பதுதான் கூட்டம். காட என்றால் நெருப்பு என அர்த்தம். காடை அல்ல.
                                    v.        தேவேந்திரன் என்ற கூட்டத்தார் தங்களை தேவேந்திர பள்ளருடன் சிலர் ஒப்புமை கூறியதால் அவர்கள் தங்களை தேர்வேந்தர் என்று கூறலாயினர். ஆனால், உண்மையில் அக்கூட்டத்தின் பெயர் தேவந்தை ஆகும். தேவந்தை என்று தங்களை இனி அடையாள படுத்துங்கள் தேவேந்திர/தேர்வேந்தன்  அல்ல.
                                   vi.        செம்பூத்தான். இது செம்பூதன் ஆகும். அதாவது பூதன்.அதிலிருந்து செம்பூதன். செம்மையான் பூதன். அதைவிடுத்து செம்பூத்து பறவையை அடையாள கூறுகின்றனர். அது தவறு. செம்பூத்துக்கும் செம்பூதனுக்கு சம்பந்தம் இல்லை.
                                  vii.        ஆந்தை என்பது ஆதன் + தந்தை. ஆதனை தந்தையாக கொண்டோர். ஆதன் என்பது “ஆன்த” எனும் மரூஊ வாகவும் திரியும்.
                                 viii.        சேரலன் மற்றும் சேரன் இரண்டும் இரட்டை கூட்டங்களாகும்.
                                   ix.        மேதி என்றொரு கூட்டம் உண்டு. இதற் மறு பெயர் எருமை கூட்டம். எருமையூர் என்பது மைசூர். மைசூரன் என்றும் பொருள்படும்.
                                    x.        செம்ப கூட்டத்தினர் செம்பொன் என அழைக்கின்றனர். அது செம்ப கூட்டமே.
                                   xi.        அது போல, செங்கண்ணன் செங்குன்னியும் இரண்டும் இரட்டை கூட்டமே. இவ்விரண்டுள் கல்யாணம் கூடாது.

4.   வெள்ளாளரில் உள்ள கூட்டங்களில் நாட்டார் வகையறா/காணியாளர் வகையறா மற்றும் குடிவந்தோர் வகையாரக்களை பிரித்து அறிய
மனிதரின் பழக்கவழக்கங்கள் அவர்களின் வாழிடத்தில் இருக்கும் சூழ்நிலை கொண்டு உருவாகிறது. அப்பழக்கவழக்கமானது தலைமுறைகளில் தொடர்கிறது. கலாச்சாரமாகிறது. இட நகர்வின்போது சில பழக்கவழக்கங்கள் அக்கலாச்சாரத்துடன் சேர்கிறது. இவை பெரும்பாலும் இயற்கையை ஒட்டி வாழந்து பல தலைமுறைகளுக்கும் நிலைக்கும் வகையில் ஏற்படுத்தப்படுகிறது. அதுவே தேச தர்மம் என்று அறிவுறுத்தப்பட்டது. சில பழக்கவழக்கங்கள் மனதை, உடலை சுத்தமாக வைத்து எல்லா உயிர்களையும் காக்க சில தொழில் குறிப்பாக உழுதொழிலை மேற்கொள்ள/மேற்கொண்டு வாழ உருவாக்கப்பட்டது. உணவுமுரையும் அங்ஙனமே இருக்கும். இவ்வாறு இயற்கையுடன் ஒன்றி தீங்கை சரிசெய்து வாழும் குடிகளை ஒழுக்க குடிகள் என்றும் இதுவன்றி இருப்போரை நீசகுடிகள் என்றும் கூறுவர்.  
இவ்வாறு முக்கியமாக விவசாயம் செய்து வாழும் குடிகலோழுக்க குடிகளாகவே இருக்கும். இவ்வொழுக்க குடிகளுக்குள் ஒழுக்கத்தை சூழ்நிலை காரணமாக மாற்றிக்கொண்டு வெவ்வேறு படிநிலைகளில் வாழும் வகையில் இவர்களை மூன்றாக வகுக்கின்றனர் கொங்கு மண்டலத்தில்.
a)    நாட்டார் / எஜமானர் / நாட்டுக்கவுண்டர்  / முன்னோர் / முழுக்குடியானவர்
வெள்ளாளர்களுள் நாட்டதிகாரம் கொண்டு நீர்நிலைகளை காத்து, பசுக்களை அந்தணர்களை காத்து வாழ்பவர்களை நாட்டார் என்றும், எஜமானர்கள் என்றும் காராளர் என்றும் அழைப்பர். இவர்கள் புலால் உணவை தவிர்ப்பார். நெறிமுறைகள் நிறைய இருக்கும் மிகவும் நேர்மை நீதியுடன் வாழ்வர். இவர்கள் அதே ஒழுக்கத்துடன் வாழும் தன் குலகுடிகளில் மண உறவு கொள்வர். அதுவே அவர்களுக்கு நிலைத்த தன்மையை தரும்.
அவர்களுக்குள் நாட்டதிகாரமுள்ள மூத்தவனை தலைவனாக கொண்டு வாழ்வார். அம்மூத்தவர் (முன்னோர்) சொல்படியே பின்னோர் (தம்பிகள்) வாழ்வார். அம்மூத்தவம்சாவழிகளில்  வருவோருக்கு அத்தலைமை பொறுப்பு பிறப்பாலேயே வரும். அவர்கள் நிராகரிக்க இயலாது. கடமை ஏற்க வேண்டும்.  இவர்களுள் சிலருக்கு நாட்டை ஆளும் பட்டம் சூட்டி நிர்வகஸ்தராக்குவர் அரசர்கள். அப்படி பட்டம் பெற்ற நாட்டார்கள் கொங்கு இருவத்தி நாலு நாடுகளிலும் இருக்கின்றனர். சில நாடுகளில் மட்டும் பிற ஜாதி மற்றும் உட்பிரிவு வர்க்கத்தவரும் நாட்டாராக இருப்பார்.
            இவர்கள், தங்களுக்கு கீழ் காணிகளில் ஆட்சி செய்யும் காணியாளர் மக்களுடனோ அதற்கு கீழோ மண உறவு கொள்ளார். அது இன்றும் மறைமுகமாக கடைபிடிக்கப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் நாட்டார்கள் தங்களை தனி ஜாதியாகவே அடையாளம் கொண்டு நாட்டு கவுண்டர்கள் என்று அழைத்துக்கொண்டு வாழ்கின்றனர். பிற இடங்களில் அவை தனியாக பிரிட்டிஷ் கேசட்டீர்களில் பதிவாகா விட்டாலும் இன்றும் எஜமாங்க வீடு என்று தனியாக அழைக்கப்படுகின்றனர்.
b)   காணியாள வெள்ளாளர்  / பின்னோர் (வெள்ளாள கவுண்டர்) / குடியானவர்
                        நாடு உருவாக்கி அல்லது பெற்று நாட்டதிகாரம் பெற்ற நாட்டார்களுக்கு கீழ் அவர்களது தம்பி (பின்னோர்) வம்சத்தார் ஒரு சிறு காணிபெற்று அதற்குள் உழுதுண்டு வாழ்த்தால் அவர்கள் காணியாளர் ஆகின்றனர்.   இவர்களே நமது வெள்ளாள கவுண்டர்களுள் பெரும்பான்மையாக இருகின்றனர். இவர்கள் தனக்கு சமமான தன் நாட்டு காணியாளகவுண்டர்களுள் மட்டுமே மணவினை கொள்வர். ஏனெனில், உழுகுடி என்பதால் வெவ்வேறு சீதோஷண நிலை உள்ள நாடுகளுள் உள்ள காணிகளில் மணவினை கொண்டால் மண்வாகு மற்றும் சம்பிரதாய மாற்றங்காளால் அங்கே புகுந்த பெண்ணால் வாழ முடியாது. ஆகையால் தன்நாட்டு காணியாளர்களுக்குள் மட்டுமே பெண்கொடுத்து கட்டுவர். உதாரணமாக ஆற்றை தாண்டி பெண் கொடுக்க மாட்டார்கள். காரணம் நாடு மாறும் சீதோஷண மண்வகைகள் மாறும். இவர்கள் விரத காலங்கள் /பண்டிகை காலங்களில் புலால் உணவை தவிர்ப்பர். தவிர்க்க வேண்டிய சிந்தனை இருக்கும்.  நியாய தர்மங்களுக்கு கட்டுப்படுவது குறித்த சிந்தனை இருக்கும்.
c)   குடிவந்தோர்  
மேற்குறிப்பிட்ட இருவரும் எந்த காணியுரிமையும், நாட்டுரிமையும் இல்லாது தன் பூர்வீக இடத்திலிருந்து வெளியேறி தஞ்சம் புகுந்து கூலிவேலை செய்து வாழ்ந்தால் அவர்களை குடிவந்தோர் என்பர். அவர்களுக்கு உரிமைகள் மற்றும் கடமைகள் குறைவாக இருக்கும். அவர்கள் சுகவாசிகளாக இருப்பர். கஷ்டநஷ்ட பொறுப்புகள் இல்லை. இவர்கள் எளிதில் ஒழுக்க நெறியை இழக்கும் நிலையில் இருப்பர். இவர்களுடன் அவ்வூரில் வாழும் காணியாளர்களோ, நாட்டர்களோ மண உறவு கொள்ளார். பொறுப்பு குறைவான வாழ்க்கை வாழும் இவர்கள் வீட்டில் அதிக பொறுப்புள்ள பெண்ணால் வாழ இயலாது. ஆகையால், குடிவந்தோர் அவர்களை போலவே வேறு குடிவந்த வெள்ளாள சனத்துடனே மணஉறவு கொள்வர். புலால் உணவை தவிர்க்க மாட்டார்கள். இவர்கள் நியாய தர்மங்களுக்கு கட்டுபடுவது சிறிய கடினம். எளிதில் கேடுகளுக்கு இரையாவர்.
            இதைத்தான் சாதி சனம் என்று கூறுவார்கள். மேற்குறிப்பிட்ட மூவரும் வெள்ளாள சாதியாயினும் சனம் வேறு. ஆகவே, ஜாதி சனம் பார்த்து கல்யாணம் பண்ணுங்க. டைவர்ஸ் ஆகாது.  இன்றும், ஒரு தலைமுறை டவுனில் வாழும் குடும்பங்களுடன் , கிராமத்தில் வாழும் வெள்ளாள சனம் மணஉறவு கொண்டால் பல கருத்து வேறுபாடுகள் வந்து டைவர்ஸ் ஆகிறது. 


முக்கியமானவை – தற்போது நீங்கள் உணர்ந்திருக்க வேண்டியது
1.   “கவுண்டர்” பட்டத்தை வைத்து மண உறவு கொள்ளாதீர்கள்
2.   வெள்ளாளரா என்று முடிவு செய்யுங்கள். பிற பிரதேச (சோழிய,பாண்டிய, கார்காத்த, தொண்டை மண்டல )  வெள்ளாளரா என்பதை தெரிந்து கொண்டால் அவர்களை தர்வித்து விடுங்கள். தேசங்களுக்குள் மணவினை கூடாது ஆகாது.
3.   கொங்கு வெள்ளாளர் எனில் அவற்றுள் எந்த உட்பிரிவு என்று பார்த்து உங்கள் சுயசாதியா என்று முடிவு செய்யுங்கள்.
4.    பின் உங்கள் சுயசாதியில் சனம் (எஜமாங்களா, காணியாளரா, குடிவந்தோரா? ) எது என்று முடிவு செய்து மணவினை கொள்ளுங்கள்.வாழ்வு இனிக்கும்,
5.   கொங்கு திருமண மையங்களை அணுகாதீர்கள். வழியின்றி அணுகினால் மேற்கண்ட விசாரணை மேற்கொள்ளுங்கள்.
6.   முடிந்தவரை வியாபார ஜோசியர்களை/வியாபார திருமண தகவல் மையங்களை தவிர்த்து அத்தை மாமன்  வகைகளில் மணவினை கொள்ளுங்கள (முறைப்பைய்யனுக்கு ஜோசியம் பார்க்க வேண்டியதில்லை).
7.   பாரம்பரியமாக திருமணம் செய்யும் கூட்டம் மற்றும் ஊர்களில் பெண் கொடுத்து எடுங்கள்.


நன்றி